புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அய்யோ சாமி ஆளவிடுங்க.. விஜய்யும், மகேஷ் பாபுவும் மணிரத்னத்தை டீலில் விட இதான் காரணமாம்

மணிரத்னம் இப்போது படு பிஸியாக பொன்னியின் செல்வன் பட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த அளவுக்கு மணிரத்னம் டீசரிலேயே பிரம்மாண்டத்தை காட்டியிருந்தார்.

மேலும் அதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த கதையின் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை மணிரத்னம் சரியாக தேர்வு செய்திருக்கிறார் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் மணிரத்னம் இந்த கதாபாத்திரங்களுக்கு ஆரம்பத்தில் வேறு நடிகர்களை தான் தேர்ந்தெடுத்திருந்தார். அதாவது இந்த கதையில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரமான வந்தியத்தேவன் கேரக்டருக்கு அவர் முதலில் விஜய்யை தான் தேர்வு செய்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் என்ற தலைப்புக்கு சொந்தமான அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்திற்கு நடிகர் மகேஷ்பாபுவை தேர்வு செய்திருந்தார். ஆனால் அது கைகூடாமல் போய்விட்டது. ஏனென்றால் இந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட நிறைய காலங்கள் ஆகும்.

இதை யோசித்த அவர்கள் இருவரும் கால்ஷீட் பிரச்சினை வரும் என்பதால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கான கெட்டப்பையும் ரொம்ப நாட்கள் இவர்களால் போட முடியாதாம்.

இதனால் சில பல பிரச்சனைகள் இருந்ததால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் மணிரத்தினம் அந்த கதாபாத்திரங்களுக்கு கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரை தேர்ந்தெடுத்தார். தற்போது அவர்களின் கதாபாத்திரம் குறித்து வெளியான போஸ்டர்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அந்த வகையில் படம் வெளியான பிறகு இவர்களின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை இந்த கதாபாத்திரங்களில் விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரும் நடித்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பை விட இன்னும் பல மடங்கு அதிகமாக கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

Trending News