fbpx
Connect with us

நன்றியை மறந்தாரா விஜய்? பிரபல எழுத்தாளரின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நன்றியை மறந்தாரா விஜய்? பிரபல எழுத்தாளரின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய்யும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த மூஞ்சி எல்லாம் காசு கொடுத்து பாக்கணுமா என சொன்ன பத்திரிக்கை நிறுவனத்தை விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என தனது வெற்றி மூலம் எழுத வைத்தார்.

இந்நிலையில் விஜய்யின் ஆரம்பகட்ட காலங்களில் உதவி செய்த ஒருவரை நன்றியை விஜய்யும் அவரது தந்தையும் மறந்து விட்டதாக பிரபல எழுத்தாளர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல எழுத்தாளர் ஆக அறியப்படுபவர் கலைஞானம்.

சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞானம் அவர்களுக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தளபதி விஜய்யின் சினிமா ஆசைக்கு அடித்தளமிட்டவர் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர். இருந்தும் ஆரம்பகட்ட கால படங்கள் எதுவும் சரியாக ஓடாமல் பல விமர்சனங்களுக்கு ஆளானார் விஜய். இருந்தும் விஷ்ணு என்ற படம் ஓரளவு தளபதி விஜய்யை அடையாளம் காட்டியது. அந்த படத்தின் கதையை எழுதியவர் கலைஞானம் தானம்.

அதன் பிறகு பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் கலைஞானம் அவர்களை கண்டுகொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் எஸ் ஏ சந்திரசேகரிடம் கலைஞானம் வாடகைக்கு வீடு கேட்டதாகவும் தற்போது அந்த பொறுப்பை எல்லாம் மகனும் மருமகளும் தான் பார்த்துக் கொள்கிறார்கள் எனவும் கூறி கலைஞானத்தை ஒதுக்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top