Tamil Cinema News | சினிமா செய்திகள்
5 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு மிரட்ட வரும் கொடூர வில்லன்.. அஜித்-விஜய்யையே ஆட்டிப் படைத்தவராச்சே!
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு வில்லன் நடிகர்களுக்கும் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் நம்பியார், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அவர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வில்லனாக கலக்கியவர் தான் ஆசிஷ் வித்யார்த்தி.
மராத்திய நடிகரான இவர் ஹிந்தியில் படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் தரணி தான்.
விக்ரம் நடித்த தில் படத்தில்தான் முதன்முதலாக வில்லனாக களமிறங்கினார் ஆசிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்தார்.
வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஆசிஷ் வித்யார்த்தி தற்போது இந்தியில் சில படங்களிலும் வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான அனேகன் படத்திற்கு பிறகு ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் எக்கோ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இந்த படத்தின் கதை அவரை பெரிதும் இம்ப்ரெஸ் செய்ததால் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

ashish-vidyarthi-cinemapettai
