Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மானங்கெட்ட VS மண்டியிட்ட.. இணையதளத்தில் மோசமாக அடித்துக்கொள்ளும் தல தளபதி ரசிகர்கள்

தமிழ்நாட்டின் தல அஜித்துக்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளதோ அதே அளவுக்கு தளபதி விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். அதனால என்ன பிரச்சனை அப்படின்னு கேட்கிறீங்களா. அதனால் தான் பிரச்சனை. சம அளவு ரசிகர்களை கொண்டதால் யார் பெரியவர்கள் என்ற போட்டி தல தளபதி ரசிகர்களிடம் எப்போதுமே இருக்கும்.

அந்த வகையில் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். அதிலும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி சண்டையிட்டுக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. மற்ற மொழி சினிமாக்களில் இந்த மாதிரியான பிரச்சனைகளை பார்த்திருக்க முடியாது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே தலயா தளபதியா என போட்டி இருந்து கொண்டுதான் இருக்கும். அது பட வெளியீடு என்றாலும் சரி, வசூல் என்றாலும் சரி, யார் நல்லவர்கள் என்றாலும் சரி, எல்லாவற்றிற்கும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையிலேயே ஒரு நண்பர்கள் கூட்டத்தில் தல மற்றும் தளபதி ரசிகர்கள் இருவரும் சரிசமமாக இருப்பார்கள். இருந்தும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் உலகப் புகழ் பெற்றிருக்கும் இருவரையும் மாறி மாறி கேவலப் படுத்திக் கொள்வது அவ்வளவு சரியல்ல.

இதற்கு ஒரே தீர்வு தல மற்றும் தளபதி இருவரில் ஒருவர் இதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டியது முக்கியமானதாக கருதப்படுகிறது. பிகில் இசை வெளியீட்டின் போது கூட தளபதி விஜய் தேவையில்லாத விஷயங்களை செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.

அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித், ஒருத்தருக்கு விஸ்வாசமாய் இருக்கணும் மத்தவங்களை ஏன் கேவலபடுத்துறீங்க என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். தற்போது இணையதளத்தில் #மண்டியிட்ட_வலிமை மற்றும் #மானங்கெட்ட_மாஸ்டர்விஜய் என்பதனை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top