Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொட முடியாத உயரத்தில் தனுஷ்.. அஜித் விஜய் கூட நெருங்க முடியாது
தமிழ் சினிமாவில் சமீப காலமாக போட்டிகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதன் முதலில் ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொறுத்துதான் போட்டிகள் அமையும்.
ஆனால் தற்போதெல்லாம் படங்கள் வசூல், டிவிட்டர் ரெக்கார்டு, யூடியூப் ரெக்கார்ட், TRP ரெக்கார்டு என எல்லாவற்றிலுமே போட்டிகள் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு சாதனையையும் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் போட்டிகளாக பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் போட்டிகளும் ரசிகர் பட்டாளங்களும் நிறைந்தவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான். ஆனால் இவர்களின் சாதனை எல்லாம் ஒரே படத்தின் மூலம் ஓரம் கட்டிவிட்டார் நடிகர் தனுஷ்.
யூடியூபில் ஒரு படத்தின் பாடல்கள் எந்த அளவு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது என கணக்கிடப்படுகிறது. அதில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் பாடல்கள் யூடியூபில் 950 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் எடுத்த விஸ்வாசம்படம் 500 மில்லியன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக தளபதி நடிப்பில் உருவான மெர்சல் படம் உள்ளது.
யூடியூப் பொறுத்தவரை தனுஷ் தான் கிங் என்பதை ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பிறகு ரவுடி பேபி பாடல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
