Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப் போட்டோ !
வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட். இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிறகு தயாரிப்பாளர், நடிகர் அவதாரம் எடுத்து இன்று ஹீரோவாக தனக்கென்று தனி மார்க்கெட் பிடித்துவிட்டார்.
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி என்று வித்தியாசமான தலைப்பில் தான் இதுவரை இவர் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் கைவசம் தற்பொழுது திமிரு புடிச்சவன், யப்பன், கொலைகாரன் என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றது.

Vijay Antony
திமிரு புடிச்சவன்
விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கும் படத்தின் டைட்டில் திமிரு புடிச்சவன். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க இருக்கிறது மேலும் இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நிவர்த்த பெத்துராஜ் நடித்துள்ளார்.

Vijay Antony
மோஷன் போஸ்டர்
#Thimirupudichavan first look motion poster releasing on July 18th at 7pm ??? pic.twitter.com/K0SmtO7XtS
— vijayantony (@vijayantony) July 16, 2018
இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு ரிலீசாகிறது.
