விஜய் அஜித்தை வன்மையாக கண்டித்த பிரபலம்.. சம்பவம் பண்ண கைகோர்த்த தல தளபதி ரசிகர்கள்

தல, தளபதி படங்கள் சமீபகாலமாக தோல்வியடைந்த நிலையில் பல விமர்சனங்களை ரசிகர்களும் திரைவிமர்சகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வலிமை திரைப்படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் அழுத்தமில்லாத கதையை தியேட்டர்களில் டிக்கெட்டுகளை எடுத்து பார்க்க வேண்டுமா என்ற கேள்விக்குறியான நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்படுகின்றனர். அதற்கான முக்கியமான காரணத்தை குறித்து நடிகர் அருண்பாண்டியன் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், வில்லன்,குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அருண்பாண்டியன். 80 களில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஊமை விழிகள் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானார்.ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற இந்நிலையில் தற்போது நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆதார் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் தமிழ் சினிமாவின் பொற்காலம் எல்லாம் பாரதிராஜா மற்றும் நாங்கள் நடித்த காலத்தோடு முடிந்துவிட்டது என்றும், தற்போது தமிழ் சினிமா பொற்காலம் இல்லை என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார். தமிழ் சினிமா தற்போது பின்தங்கியுள்ள முதற்காரணம் மற்ற மொழிகள் திரைப்படங்கள் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகி கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

அதற்கான காரணம் திரைப்படங்களில் கதைகளுக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால் தற்போது பீஸ்ட் மற்றும் வலிமை திரைப்படங்களில் கதைகளில் அழுத்தம் இல்லை, ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் மட்டும் படம் இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவில் கதைகளிலும்,படத்தின் இயக்கத்திலும் ஜெயித்துக் கொண்டே இருந்தோம், ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாறி வருகிறது. இதனை தான் வன்மையாக கண்டிப்பதாக அருண்பாண்டியன் தெரிவித்தார். ஏனென்றால் ஒரு படத்திற்கு 90% பட்ஜெட் நடிகர்களுக்கே சம்பளமாக போய்விடுகிறது,வெறும் 10% பட்ஜெட்டில் மட்டுமே படத்தை எடுத்தால, அந்த திரைப்படம் எப்படி வெற்றியடையும் என வேதனை தெரிவித்தார்.

மேலும் எங்கள் காலத்தில் 90 சதவீதத்திற்கு படம் இருக்கும் 10 சதவீதத்திற்கு மட்டுமே எங்களது சம்பளங்கள் அமையும். தற்போது இந்த நிலை தலைகீழாக மாறி தமிழ் சினிமாவை பின்னுக்குத் தள்ளி உள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து வரும் நிலையில் இங்குள்ள முன்னணி நடிகர்களான தல, தளபதி திரைப்படங்கள் வெற்றி கொடுக்காத காரணம் கதைக்கு முக்கியத்துவம் தராத நிலையே என்று அருண்பாண்டியன் தெரிவித்தார்.

இதற்கு தல தளபதி ரசிகர்கள் பலரும் ஏதோ ஒரு படம்தான் ஓடவில்லை ஆனால் இவர்கள் நம்பித்தான் தமிழ் சினிமாவே உள்ளது சும்மா ஏதாவது ஒரு வெளிமாநில படம் வெளியாகி ஹிட் ஆகிவிட்டால் உடனே தமிழ் நடிகர்களை குறை சொல்கிறீர்களா என கேட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்