ajith-vijay

இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் விஜய், அஜித் படங்கள் ரிலீஸாகவில்லை என்றால் ரசிகர்களை மகிழ்விக்க சில திரையரங்குகளே அவர்கள் நடித்த பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் வரும் புத்தாண்டில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் அஜித் நடித்த வீரம் படத்தையும் திரையிட திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் திட்டமிட்டுள்ளது. இதில் துப்பாக்கி டிசம்பர் 31-ம் தேதி இரவு 9.30 மணிக்கும் வீரம் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கும் திரையிடப்படுகிறது.