விஜய் அஜித்தின் படத்தை காப்பியடித்த விக்னேஷ் சிவன்.. காத்துவாக்குல 2 காதல் படத்தின் கதை இதுதான்

நானும் ரௌடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை என முக்கோண காதல் கதை கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இது முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த கதைக்களம் தமிழில் வெளியாகும் முதல் முக்கோண காதல் கதை படமல்ல. இதற்கு முன்னரே தலயும், தளபதியும் இது போன்ற கதைக்களத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு அஜித், தேவயானி, ஹீரா ராஜகோபால் என பலர் நடித்து அகத்தியன் இயக்கத்தில் வெளியான படம் காதல் கோட்டை. கோத்தகிரியில் வாசிக்கும் கமலி என்ற பெண்ணிற்கும், ஜெய்ப்பூரில் பணிபுரியும் சூர்யா என்பவருக்கும், சூர்யா வேலை செய்யும் கம்பெனி உரிமையாளரான நேயா என்பவருக்கும் நடக்கும் காதல் போராட்டங்களே கதை. நேயா சூர்யாவை காதலிக்க, அது வரை நேரில் சந்திக்காத கலியுகம் சூர்யாவும் கடிதத்தின் மூலம் காதலித்து வருவார்கள். அவர்கள் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சந்திக்கும் போது தியேட்டரில் விசில் சத்தங்களையும் கைதட்டல்களையும் அள்ளியது. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் அந்த ஆண்டு 3 தேசிய விருதுகளை வென்றது.

இதே போலவே 1998ஆம் ஆண்டு விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான நினைத்தேன் வந்தாய் படமும் முக்கோண காதல் கதை படமே. கனவில் வரும் காதலியை தேடி திரிந்து அவளை கண்டு பிடிப்பதற்குள் தந்தையின் அச்சுறுத்தலால் வேறோரு பெண்ணுடன் நிச்சயமாகி பின்னர் தன் காதலியை கண்டுபிடித்து அவளுடன் காதலில் விழும் நாயகன்,

தன்னுடைய அப்பாவியான அக்காவை நிச்சயத்துள்ளது தனது காதலன் தான் என தெரிந்து என்ன செய்வது என தெரியாமல் பரிதவிக்கும் காதலி, நிச்சயத்தவரை கணவனாகவே எண்ணி நாட்களை கடத்தும் அப்பாவி பெண் என மூவருக்கு இடையில் நடக்கும் காதல் பாச போராட்ட கதையாக இந்த படம் உருவாகியிருந்தது. காமெடி, காதல் காட்சிகள், அக்கா தங்கை பாசம், பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக அமைந்த இந்த படமும் பெரும் வெற்றி படமாக அமைந்தது.

சிறந்த நடிகர், நடிகைகள், ஹிட்டித்த பாடல்கள் என இந்த மூன்று படங்களிலும் ஒற்றுமை உள்ளது. மேலுள்ள இரண்டு படங்களும் கதைக்களம் மட்டுமின்றி கதையை கையாண்ட விதமும் அவற்றில் சிறப்பாக இருந்ததால் இரண்டு வெற்றி படங்களாக அமைந்தன. விக்னேஷ் சிவன் இந்த சிக்கலான கதையை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை இன்னும் கொஞ்சம் தினங்களில் தெரிந்து விடும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்