சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அடுத்த பொங்கலை டார்கெட் செய்யும் அஜீத், விஜய்.. யார் வந்தாலும் ஒரு கை பார்க்கலாம்

8 வருடங்கள் கழித்து தளபதி விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளப்போகும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் AK61 படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், தீபாவளியன்று ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆந்திராவில் அக்னிபாத் திட்டத்திற்கான போராட்டம் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இதனிடையே மீதமுள்ள AK61 படத்தின் படப்பிடிப்பினை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் முழுக்க படப்பிடிப்பு நடைபெறும் என்பதால், இந்த வருட தீபாவளியன்று AK61 திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது என்பது சாத்தியமற்றது.

இந்நிலையில் அடுத்த வருடம் பொங்கலன்று AK61 திரைப்படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பொங்கலன்று தளபதி விஜயின் 66 வது படமான வாரிசு திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே பல வருடங்கள் கழித்து தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் மற்றும் தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வில்லன்,பகவதி. 2003 ஆம் ஆண்டு வெளியான ஆஞ்சநேயா, திருமலை. 2006 ஆம் ஆண்டு வெளியான பரமசிவம், ஆதி. 2007 ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார், போக்கிரி உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையின் பொது ஒரே நாளில் ரிலீசாகி நேருக்கு நேர் ஓடிய திரைப்படங்களாகும்.

கடைசியாக தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வீரம், தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் 2014 ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீசானது. இந்நிலையில் 8 வருடங்கள் கழித்து AK61 மற்றும் தளபதி விஜய்யின் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீஸாகவுள்ளது அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News