Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய், அஜித்துக்கு ஜோடியாகும் வாய்ப்பைத் தவறவிட்ட ஐஸ்வர்யா ராய்.. புலம்பிய ரட்சகன் பட இயக்குனர்.!

90களில் ஹிட் இயக்குனராக இருந்தவர்களில் ஒருவர் பிரவீன் காந்தி. ரட்சகன், ஜோடி, ஸ்டார் என அவர் இயக்கியதில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் விஜய், அஜித்துடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ஜோடி படத்தின் கதையை முதலில் விஜய்யிடம்தான் கூறினேன், அவருக்கும் கதை பிடித்துவிட்டது, முதலில் அவர்தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது, ஆனால் அந்த நேரத்தில் அவரால் படத்தில் கமிட்டாக முடியவில்லை.

அதன்பின் இதில் அவருக்கு பதில் பிரசாந்த் கமிட்டானார் என்றார். மேலும், இந்தப்படத்தில் நாயகியாக முதலில் ஐஸ்வர்யா ராயிடம் பேசினேன். ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போகவே இதில் சிம்ரன் நடித்தார்.

இந்த படத்தையடுத்து அபூர்வன் என ஒரு படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அஜித் – ஐஸ்வர்யா ராய் இருவரையும் வைத்து அப்படத்தை இயக்க இருந்தேன். ஜோடி படத்தை தவற விட்டுவிட்டேன், எனவே இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார் ஐஸ்வர்யா.

aishwarya-rai

aishwarya-rai

இதற்காக பேப்பரில் விளம்பரம் எல்லாம் கொடுத்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அப்படத்தையும் இயக்க முடியவில்லை என்றார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் குறித்து பேசிய அவர், ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற பூவுக்குள் ஒளிந்திருக்கும் உட்பட மொத்தம் 15 டியூன்களை ரகுமான் என்னிடம் கொடுத்தார்.

நான் அந்த டியூனை மிஸ் செய்ததற்காக இப்போது வருத்தப்படுகிறேன் என கூறினார். மேலும், மாதவனை வைத்தும் ஒரு படத்தை இயக்கவிருந்ததாக கூறியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான துள்ளல், புலிப்பார்வை இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.

Continue Reading
To Top