365 நாட்கள் ஓடி சாதனை.. விஜய், அஜித்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற 7 படங்கள்

சினிமாவில் தற்போது 365 நாட்கள் படம் ஓடுமா என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த ஒரு சாதனை அஜித், விஜய் தலைமுறையில் முடிந்துவிடும் என்பது சற்று அதிர்ச்சிதான். எம்ஜிஆர், சிவாஜி, ராமராஜன், ரஜினி, கமல் போன்ற பிரபலங்கள் நடித்த படங்கள் 365 அசால்டாக ஓடிவிடும். ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது, விஜய் மற்றும் அஜித் நடிப்பில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

பூவே உனக்காக: பிப்ரவரி மாதம் 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில், விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தில் சங்கீதா, நாகேஷ், நம்பியார், மலேசியா வாசுதேவன், சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவானதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

காதல் கோட்டை: ஜூலை மாதம் 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில், அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. இப்படத்தில் தேவயானி, கிரண், ஹீரா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் சீன் வேற மாதிரி எடுக்கப்பட்டதால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக இயக்குனர் அகத்தியன் பல விருதுகள் பெற்றார்.

காதலுக்கு மரியாதை: டிசம்பர் மாதம் 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில், பாசில் இயக்கத்தில் வெளியாகிய இப்படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஷாலினி, தலைவாசல் விஜய், தாமு, மணிவண்ணன், சிவகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கதைக்களம் காதல் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.

வாலி: ஏப்ரல் மாதம் 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில், எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. படத்தின் நாயகி சிம்ரன், விவேக், ஜோதிகா, பாண்டு என பலர் நடித்துள்ளனர். அண்ணன், தம்பியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரெட்டை வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் வரும் அண்ணன், தம்பி கேரக்டரில் அண்ணன் வில்லனாகவும் தம்பியை ஹீரோவாகவும் வடிவமைத்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா வேற மாதிரி கதைக்களத்தில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளன.

துள்ளாத மனமும் துள்ளும்: ஜனவரி மாதம் 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் எழில் இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தில் சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தன்னால் பார்வை இழந்த பெண்ணை காப்பாற்றி மீண்டும் அப்பெண்ணிற்கு பார்வை வரவைத்து அவளின் ஆசையை நிறைவேற்றும் படமாக படத்தின் கதைக்களம் அமைத்திருக்கும். மேலும் படத்தில் கிளைமாக்ஸில் வரும் பாடல் படத்தின் வெற்றிக்கும் ஒரு முக்கிய காரணம்.

அமர்க்களம்: அஜித்தின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று, ஆக்சன் ஹீரோவாக இதில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார். படத்தில் ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா மற்றும் அம்பிகா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் முதலில் ரகுவரன் மற்றும் நாசர் மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் தல அஜித் இப்படத்தில் ஆக்சன் படமாக மாற்ற வேண்டும் என்று இயக்குனரிடம் பேசியதால் கதையின் கதைக்களம் முழுவதும் மாற்றப்பட்டது.

கில்லி: ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில், தரணி இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் கபடி விளையாட்டு வீரராக நடித்திருப்பார். மேலும் படத்தில் திரிஷா, தாமு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெனிஃபர் போன்ற பலர் நடித்துள்ளனர். படத்தில் கபடி போட்டிக்காக மதுரை செல்லும் ஹீரோ அங்கு ஹீரோயினுக்கு ஏற்படும் பிரச்சனையை சரி செய்து வில்லனிடம் இருந்து காப்பாற்றுவது இப்படத்தில் இருக்கும் கதைக்களம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்