மீண்டும் நேருக்கு நேராக மோதும் விஜய், அஜித்.. கேப்பில் கிடா வெட்டும் சிவகார்த்திகேயன்

விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி பல வருடங்கள் ஆகிறது. இதனால் மீண்டும் இவர்களது படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்ள வேண்டும் என அவர்களது ரசிகர்கள் ஆசைப்பட்ட வருகின்றனர். மேலும் அஜித்துக்கு கடைசியாக வெளியான வலிமை படமும், விஜய்க்கு கடைசியாக வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனால் விஜய், அஜீத் இருவருமே அடுத்த படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில் தளபதி 66 படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. அஜித் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தாமதமாவதால் தளபதி விஜய் படத்துடன் மோத வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அஜித்தின் ஏகே 61 படமும் விஜய்யின் தளபதி 66 படமும் மோதிக்கொள்ள உள்ளது. இந்த இரு நடிகர்களின் படங்கள் எப்போதுமே வசூல் வேட்டையாடும் நிலையில் ஒரே நாளில் வெளியாவதால் யார் படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வசூல் மன்னன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

முதலில் இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கார்த்தி படத்துடன் மோத இருந்தது. ஆனால் தற்போது அஜித்தின் ஏகே 61 படம் தீபாவளிக்கு வெளியாகாது என தெரிந்ததால் சிவகார்த்திகேயன் பக்காவா ப்ளான் போட்டு தீபாவளி ரிலீசுக்கு பிரன்ஸ் படத்தை மாற்றியுள்ளார்.

இதனால் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லாததால் சிவகார்த்திகேயன் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். மேலும் பிரின்ஸ் படமும் 100 கோடி வசூல் உறுதி என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்