Connect with us

Cinemapettai

இணையத்தில் அனலாய் தெறிக்கும் தல, தளபதி ரசிகர்களின் சண்டை!  உங்க அன்புக்கும், அளப்பரைக்கும் ஒரு அளவே இல்லையா!

thala-thalapathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் அனலாய் தெறிக்கும் தல, தளபதி ரசிகர்களின் சண்டை!  உங்க அன்புக்கும், அளப்பரைக்கும் ஒரு அளவே இல்லையா!

தமிழ் திரையுலகில் உச்ச நாயகர்களாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர்கள் தான் தளபதி விஜய்யும், தல அஜித்தும். இவர்களுக்கென  தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் தல- தளபதி ரசிகர்களுக்குள் அடிக்கடி தலயா தளபதியா என்ற பிரச்சனை ஏற்படுவது வழக்கம். ஆனால் சில காலமாக அந்த பிரச்சனை ஏதும் இன்றி ஒன்றாகப் பின்னிப்பிணைந்து காணப்பட்டனர் தல தளபதி ரசிகர்கள்.

இந்த நிலையில் அரசியல் விவகாரத்தினால்  தனது தந்தையையே பகைவன் போன்று நடத்தும் சூழலுக்கு நடிகர் விஜய் தள்ளப்பட்டு இருப்பதை பற்றி கடுமையான விவாதங்களை அவருக்கு எதிராக நடத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

மேலும் இதைக் காரணம் காட்டி விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் அநாகரீகமான முறையில் மிகவும் கீழ்தனமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதாவது நடிகர் விஜய்கே தெரியாமல் அவருடைய அப்பா, விஜயின் பெயரில் கட்சி தொடங்கியதை தளபதி எதிர்த்ததால் தல ரசிகர்கள் ‘#நன்றிகெட்டவிஜய்’ மற்றும் ‘#SACexposesvijaymafia’ என்றஹேஷ்டாக்குகளை தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் ‘#நன்றிகெட்ட_நாய்_அஜித்’ என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி அதை ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு விஜய்யையும் அஜித்தையும் மாறி மாறி கேவலமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

thala-thalapathy

thala-thalapathy

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top