Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அஜீத் வெளிப்படையாக ஒரு மோதல்!
அட்லீ இயக்குகிற விஜய் 61 படத்தின் பப்ளிசிடிக்காக அஜீத்தின் மேனேஜர்தான் நியமிக்கப்பட்டாராம் முதலில். பொதுவாக தான் நடிக்கும் படத்தின் மற்ற மற்ற டெக்னீஷியன்களை கவனித்து பார்க்கும் ஹீரோக்கள், இதுபோன்ற சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. அப்படிதான் உள்ளே நுழைந்தாராம் அஜீத்தின் மேனேஜர். இவரும் அட்லீயும் பல வருஷத்து பிரண்ட்ஸ். அந்த நட்பிற்கு அழுத்தம் கொடுத்த அட்லீ இந்த விஷயத்தை விஜய் காதிலேயே போடவில்லை. ஆனால் விஜய் படத்தில் அஜீத்தின் மேனேஜர் வந்தால் இங்கிருக்கிற ரகசியங்களும் களவு போகும்தானே?
சற்று தாமதமாக இந்த விஷயத்தை விஜய்யின் காதுக்கு கொண்டு சென்றது ஒரு நலம் விரும்பும் கூட்டம். அவ்வளவுதான் சீறிவிட்டாராம் விஜய். யாரை கேட்டுட்டு இப்படி பண்றீங்க? முதல்ல அவரை தூக்குங்க என்று கடிக்க… அடுத்த வினாடியே வேறொருவர் வந்திருக்கிறார். இதற்கப்புறம் நடந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புவோம்.
விஜய் 61 படத்தின் ஷுட்டிங் துவங்குகிற அதே நாளில் தனது 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் டீசரையும் வெளியிட்டார் அஜீத். இதனால் சமூக வலைதளங்களில் டிராபிக் நெரிசல். அதுமட்டுமல்ல…. இரு பெரும் ரசிகர்களுக்கு இடையில் ஒரே கெட்ட வார்த்தை அர்ச்சனைகள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
