தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

பிரபல மலையாள நடிகர் ரோஷன் பஷீரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது விஜய் தனக்கு கூறிய அட்வைஸ் ஒன்றை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரோஷன் கூறியதாவது ” விஜய் என்னிடம் என் வயதை கேட்டார். நான் 23 என்றேன். உடனே, ‘ தயவுசெய்து 30 வயதில் திருமணம் செய்துகொள். இது என் அட்வைஸ்’ என விஜய் கூறினார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here