கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் எஃபிட்ரைன் ஊக்க மருந்து கைப்பற்றப்பட்டது. போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை தான் முக்கிய குற்றவாளியாக தானே போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கென்யாவில் நடந்த போதை கும்பலுடனான சந்திப்பில் மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி, அவரது தொழில்முறை நண்பர் டாக்டர் அப்துல்லா. ஏவான் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோ ஜெயின், ஜெய் முகி ஆகியோர் பங்கேற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் உள்ள மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி உள்ளதால் அவர்களுக்கு எதிராக இன்டர்போல் உதவியை போலீசார் இந்திய போலீசார் கேட்டனர். வழக்கு தொடர்பாக பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் தற்போது நடிகை மம்தா குல்கர்னி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மம்தா குல்கர்னி கடந்த 1991ம் ஆண்டில் நடிகர் விஜய் தயாரிப்பில், அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில், அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை எழுதிய ‘நண்பர்கள் படத்தில் நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், நாகேஷ், மனோரமா நடித்தனர். இதில் ஹீரோனியாக மம்தா குல்கர்னி தமிழில் அறிமுகமாகினார். தற்போது மம்தா குல்கர்னி தானே நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவரை போலீசார் இன்டர்போல் போலீஸ் உதவியுடன் தானே போலீஸ் கைது செய்ய திட்டமிட்டு வருகின்றனர்