Videos | வீடியோக்கள்
அரபி குத்து வீடியோ பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. டான்ஸ்ன்னா தளபதி தான்
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
பீஸ்ட் திரைப்படத்தில் சமீபத்தில் ஜாலியா ஜிம்கானா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அதுவும் விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் இப்பாடலை வெகுவாக கொண்டாடினர் இப்பாடலுக்கு பிறகு உலகமே எதிர்பார்த்திருந்த அரபி குத்து பாடலை பீஸ்ட் படக்குழுவினர் வெளியிட காத்துக் கொண்டிருந்தனர்.
தற்போது அரபி குத்து வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் விஜய்யின் நடனத்தை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது விஜய்க்கு வயது அதிகமானாலும் அவரது இளமையும் நடனமும் யாராலும் நெருங்க முடியாது எனக் கூறி வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
