பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தின் அடுத்த வேலைகளில் பிஸியாக இறங்கியுள்ளார். தெலுங்கிலும் தன்னுடைய மார்க்கெட்டை விரிவுப்படுத்த நேரடியாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கில் இருந்து இயக்குனர் வம்சி படப்பள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு என இரு தெலுங்கு சினிமாவில் தற்போது முக்கிய இடங்களிலுள்ள இருவரும் இந்த படத்தில் விஜய்யுடன் முதல் முறை இணைந்துள்ளனர். இது போக, நாயகியாக ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளராக தமன், முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், அண்ணனாக ஷ்யாம் என தெலுங்கில் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்களே படத்தில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் முதல் முறையாக நடிகர் விஜய்யுடன் சரத்குமார் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் ஸ்டுடியோவில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு பெரிய படம் உருவாகிறது என்றால் அதை பணிபுரிபவர்களை தவிர்த்து படத்தில் தொடர்ப்பில்லாமல் பணிபுரியும் மற்ற கடைசி கட்ட தொழிலாளர்களுக்கும் அந்த படம் உதவும்.
படத்திலுள்ள பெரும்பாலான டெக்னிஷியன்கள், நடிகர்கள் என அனைவரும் தெலுங்கு சினிமாவை மையாமாக கொண்டுள்ளதால், தன்னுடைய தமிழ்நாட்டிலுள்ள சக கலைஞர்களுக்கு இதில் எந்த வித பயனுமில்லை என உணர்ந்த விஜய், இங்குள்ள பெப்சி சங்க ஊழியர்களும் பயன்பெற வேண்டுமென்பதால் படத்தின் சூட்டிங்கை தமிழகத்திற்கு மாற்ற கேட்டு கொண்டுள்ளார்.
இதற்கு சம்மதித்து படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை முடித்தும் இருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. வருகிற மே மாத 2வது வாரத்தில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத் இணையவுள்ளார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதிராவாக நடித்து மக்களை மிரட்டியவர் நடிகர் சஞ்சய் தத். படத்தில் ராக்கி பாய்க்கு இணையாக ஆக்ஷன் காட்சிகள் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இவர் இந்த படத்தில் இணைவதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.