சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வம்சி படத்திலும் அதே மாதிரியா.. என்ன தளபதி, அதை விட மாட்டீங்க போலயே!

தளபதி விஜய் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். விஜய்யின் ஒவ்வொரு படங்களும் வசூலை தாறுமாறாக குறித்த அவருடைய சினிமா மார்க்கெட்டை உச்சத்திற்கு தூக்கி நிறுத்தி உள்ளது. அதிலும் பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மரண மாஸ் வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இது ஒருபுறமிருக்க மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பெரிய தயாரிப்பாளர் தில் ராஜூ மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

தளபதி விஜய் கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் படங்களில் இரட்டை வேடங்கள் மூன்று வேடங்கள் என அதிகபட்ச வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்தப் படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று வருகின்றன.

அந்த வகையில் அடுத்ததாக வம்சி இயக்கும் தளபதி 66 படத்திலும் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. கிராமத்து இளைஞர் மற்றும் நகர இளைஞர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவே விஜய் பல வேடங்களில் நடித்த மெர்சல், பிகில் போன்ற படங்கள் வசூலை வாரி குவித்த நிலையில் கண்டிப்பாக தளபதி 66 படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என விஜய் நம்புகிறாராம்.

- Advertisement -

Trending News