விஜய் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இயக்குனர்கள்.. பல வருடமாக காத்துக்கிடந்த வெற்றி இயக்குனர்

தளபதி விஜய்யை வைத்து படம் எடுப்பதற்காக முன்னணி இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அந்தவகையில் அடுத்தடுத்த படங்களில் இயக்குனர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தானாகவே தேர்வு செய்து முடிவு எடுத்து வருகிறார் விஜய்.

தளபதி68 திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இயக்குனர் வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து, ஆடுகளம், அசுரன்,வடசென்னை,விசாரணை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறன், பொறியாளன்,கொடி, காக்காமுட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். இதனிடையே அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2 ஆண்டுகளாக பல போராட்டங்களுக்கு பிறகு விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும்,சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கூடிய விரைவில் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதில் ஆயத்தமாகி வருகிறார்.

மேலும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய், நடிப்பில் ரிலீசான மாஸ்டர் திரைப்படம், வெளியாவதற்கு முன்பாகவே விஜய்யை சந்தித்து வெற்றிமாறன் கதையைக் கூறி இருந்தார்.

ஆனால் அச்சமயம் இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனை என்பதால் இவர்களது கூட்டணி தள்ளிப்போனது. இதனிடையே இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 ,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பை நடித்து முடித்துவிட்டு வெற்றிமாறனின் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன், வடசென்னை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விஜய்யின் கூட்டணியில் வெற்றிமாறன் சேர உள்ளதால் இத்திரைப்படம் மேலும் தள்ளிப்போய்க் கொண்டே வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்