முதல் படத்தில் விஜய் வாங்கிய சம்பளம்.. ஆனா இப்போ சம்பளத்தைக் கேட்டாலே தல சுத்துது

தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியுள்ளார். இவரது படங்கள் வெளியாகிறது என்றால் நேரடி மலையாள படங்களும் தங்களுடைய படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும் அளவிற்கு அசைக்க முடியாத இடத்தில் அங்கும் கொலோச்சி வருகிறார்.

தற்போது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் விஜய் என்கிற ஒரு ஸ்டார் இமேஜை வைத்து படம் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் செய்யும் அளவிற்கு விஜயின் ஆளுமை உள்ளது. கே.ஜி.எஃப் என்ற வெற்றி படம் வெளியான போதிலும் பீஸ்ட் படத்திற்கு அந்த படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பீஸ்ட் படத்திற்கு அடுத்து தளபதி தன்னுடைய மார்க்கெட்டை தெலுங்கிலும் அழுத்தமாக்க நேரடி தெலுங்கு படமாக உருவாகவுள்ள படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் இப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், பிரம்மானந்தம் போன்றோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு கிட்டத்தட்ட 120 கோடிக்கு சம்பளம் வழங்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு கொடுத்துள்ளார். இது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினியை கடந்து முதலிடத்திற்கு சென்றுள்ளார் விஜய். தற்போது கொடி கட்டி பறக்கும் விஜயின் முதல் சம்பளம் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முன்னர் குறிப்பிட்டது வைரலாகி வருகிறது.

விஜய் சிறுவயதில் இருந்தே சினிமா துறையில் இருப்பவர். விஜய்க்கு 1984ல் வெற்றி படத்திற்காக 500 ரூபாய் அவரது முதல் சம்பளமாக கிடைத்தது. ஒரு குழந்தை கலைஞருக்கு 500 என்பது மிகப்பெரிய தொகை என்றும் எஸ்.ஏ.சி கூறினார். அந்த சம்பளத்தை அவருக்கு வழங்கியது நடிகரும் தயாரிப்பாளரும் திரு. பி.எஸ்.வீரப்பா அவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய் ஒரு குழந்தை நட்சத்திரம் வாங்குவது பெரிய விஷயமாகும், அதை தன்னுடைய முதல் படத்திலேயே செய்துள்ளார் விஜய். அவர் வாங்கும் சம்பளம் அதிகம் என பலர் குற்றஞ்சாட்டி வந்தாலும் அவருடைய படங்களின் வசூல் தொடர்ந்து 400 கோடிக்கு மேல் இருப்பதால் இது சரியே என சிலர் அவருக்கு ஆதரவாக கூறிவருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்