தளபதி 67ல் விட்டதை பிடிக்க போராடும் லோகேஷ்.. கைகொடுக்குமா புது முயற்சி?

விக்ரம் திரைப்படத்தை போல் மாஸான திரைப்படமாக தளபதி 67 உருவாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தளபதி 66 திரைப்படத்தை விட தளபதி 67 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு முதற்காரணம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தில் கொடுத்த மாஸ் வெற்றி தான்.

இதனிடையே தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில்,தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடும்ப பாங்கான கதையாக உருவாகும் இத்திரைப்படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் பலரும் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கேங்ஸ்டர் திரைப்படமாக தளபதி 67 உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இப்படத்தை கமலஹாசன் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ்.பி.பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து கமலஹாசன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசைக்கு பதிலாக, கைதி படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ் தளபதி 67 படத்திற்கு இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் ஆசைப்பட்டதை விஜய்க்காக மாஸ்டர் படத்தில் பண்ண முடியாத நிலையில், தளபதி 67 திரைப்படத்தில் கட்டாயம் தன் ஆசையை நிறைவேற்றி கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தளபதி 66 படத்தின் வாரசுடு என்ற தெலுங்கு பட டைட்டில் வெளியான நிலையில், தமிழில் வாரிசு என்ற டைட்டிலாக இருக்குமோ எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இத்திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

எதுவாக இருந்தாலும் தளபதி விஜயின் பிறந்தநாள் அன்றே தளபதி 66 மற்றும் 67 படத்தின் அப்டேட்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பல வருடங்களுக்கு பிறகு விஜயின் பிறந்தநாளன்று இரண்டு படங்களின் அப்டேட்கள் வெளிவரவுள்ளது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்