பீஸ்ட் பட வாய்ப்பை தட்டி தூக்கிய சார்பட்டா பிரபல நடிகர்.. அனல் பறக்கும் தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில்தான் பீஸ்ட் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரை தவிர யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், அங்குர் அஜித்விகல், ஷைன் டாம் சக்கோலி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

dancing-rose-sabeer-from-sarpatta
dancing-rose-sabeer-from-sarpatta

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லரக்கல் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இணயத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பட்டா படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், ஷபீர் நடித்திருந்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தது. அந்த அளவிற்கு அவரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததாக ரசிகர்கள் தற்போது வரை கமெண்ட் செய்து வருகின்றனர். எனவே பீஸ்ட் படத்தில் இவர் இணைந்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்