வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாலிவுட் ஹீரோவுடன் கைகோர்க்கும் விஜய்.. செம குஷி மூடில் தளபதி வெறியர்கள்

விஜய் மீண்டும் அட்லியின் கூட்டணியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லி, தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படம் அடுத்த வருடம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அட்லி பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்திருந்தார்.

இதனிடையே அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் விஜயை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதுவே நடிகர் விஜய் பாலிவுட்டில் முதல் முறையாக அறிமுகமாகும் திரைப்படமாகும். மேலும், மற்றொரு சிறப்புத் தோற்றத்தில் பாலிவுட் நடிகை தீபிகாபடுகோன் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில்,வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜவான் திரைப்படத்தில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஷாரூக்கானுடன் விஜயின் காம்போவை முதல் முறையாக பார்ப்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே, உலகநாயகன் கமலஹாசன் இயக்கத்தில் வெளிவந்த ஹேராம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஷாருகான் நடித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக தமிழ் சினிமாவின் இயக்குனர் அட்லியுடன் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News