விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தினை மிக பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற அரபிய குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உலக அளவில் சாதனை படைத்து வருகிறது.
இதற்குப் பிறகு பீஸ்ட் படத்தினைப் பற்றிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பீஸ்ட் படத்தினைப் பற்றிய எந்த ஒரு அப்டேட் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் ஷமியிடம் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை கேட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் பீஸ்ட் படத்தில் விஜய் வெள்ளை சட்டையில் ரத்தத்துடன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அனிருத் இசையில் விஜய் குகையிலிருந்து வெளியே வந்து எதிரிகளிடம் சண்டை போடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் செட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் துபாயில் மிக எளிமையான முறையில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் விஜய் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் வெளியாகிறதா இல்ல பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடுகிறார்களா என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.