3000 ரூபாய் வரை பீஸ்ட் டிக்கெட் கட்டணம்.. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு,செல்வராகவன், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீசானது. ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக எடுக்கப்பட்ட நிலையில் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடமிருந்து பெற்றுள்ளது. இதனிடையே விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் ஒரு ட்ரீட் ஆக அமைந்த நிலையில் இலங்கையிலும் விஜய் ரசிகர்கள் ஆவலோடு இப்படத்தை கண்டு ரசித்தனர்.

இலங்கையில் தற்போது பொருளாதார சரிவு காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், ஒரு முட்டை நாற்பத்தி ஐந்து ரூபாய், ஒரு பால் பாக்கெட் 200 ரூபாய் என விற்கப்படும் நிலையில் மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தியும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனிடையே நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இலங்கையிலுள்ள கொழும்புவில் சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தின் முதல் ஷோவை காண விஜயின் ரசிகர்கள் திரையரங்கின் முன்பு கூட்டம் கூட்டமாக நின்றனர். 850 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை திரையரங்குகள் வசூலித்துள்ளது. இப்படி இவ்வளவு பொருளாதார போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழ்வாழ் மக்கள் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்கு காரணம் நடிகர் விஜய் மட்டும் தான்.

ஆம், நடிகர் விஜய் இலங்கை மீனவ படைகளால் அவ்வப்போது கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும், ஈழப் படுகொலைக்கு ஆதரவாகவும், உண்ணாவிரதப் போராட்டம், கண்டன முழக்கங்கள் என பலவற்றை இலங்கை தமிழர்களுக்காக எழுப்பியுள்ளார். தான் அரசியலுக்காக இது ஒருபோதும் செய்யவில்லை என்றும் என் கூட பிறந்தவர்கள் போல நினைத்து அவர்களுக்காக குரல் எழுப்புகிறேன் என்றும் உணர்ச்சிப் பொங்க தன்னுடைய கருத்துக்களை எப்போதுமே நடிகர் விஜய் பகிர்வார்.

இப்படி இலங்கை தமிழ்வாழ் மக்களிடம் விஜய் காட்டும் தனி அக்கறை தான் இன்று பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கொழும்புவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு போராட்டத்திற்கு மத்தியில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் தங்களுக்கு ஆறுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்