ரிலீஸுக்கு முன்னரே பல கோடி லாபம் பார்த்த பீஸ்ட்.. பாக்ஸ் ஆபிஸ் வசூலை பார்த்து மிரளும் திரையுலகம்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதல் பாடல், இரண்டாம் பாடல் இன்று வெளிவந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல்களாக திகழ்ந்தன. திரும்பிய பக்கமெல்லாம் பாடல்கள் ஒலித்தன. பின்னர் எப்பொழுது படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக டிரைலரும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 13 ஆம் தேதியில் திரைப்படம் வெளியாகிறது.

வசூலுக்கு குறைவிருக்காது அனைத்து திரையரங்குகளும் தீபாவளி போல் கல்லா கட்ட காத்திருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சன் பிக்சர்ஸ் அவர்களும் கல்லா கட்ட காத்திருக்கிறார்கள். ஒருவழியாக திரையரங்கு வசூல் விவரம் வெளிவந்துள்ளது. ஆச்சரியப்படவைக்கும் வசூலில் விஜய் திரைப்படம் அமைந்துள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் 175 கோடி. விஜய்யின் சம்பளம் 80 கோடி ,
இயக்குனர் நெல்சன் சம்பளம் 8 கோடி, இசையமைப்பாளர் அனிருத்தின் சம்பளம் 4 கோடி, நடிகை பூஜா சம்பளம் 2 கோடி இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நடிகர்களின் சம்பளம் சேர்த்து மொத்தம் 100 கோடி நடிகரின் சம்பளம்.

மீதமுள்ள 75 கோடியில் மட்டுமே திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ரெட் ஜெய்ன்ட்மூவிஸ் வெளியிடுகிறது. தமிழ்நாடு தியேட்டர் உரிமம் 75 கோடி, கேரளா தியேட்டர் உரிமம் 6 கோடி கர்நாடக தியேட்டர் உரிமம் 6.30 கோடி,தெலுங்கு தியேட்டர் உரிமம் 6 கோடி
ஹிந்தி தியேட்டர் உரிமம் 2 கோடி எப்படி மாநிலங்களின் வசூலை பெற்றுள்ளது.

சேட்டிலைட் ரைட்ஸ் பொருத்தவரையில் சன் டிவியை எடுத்துக்கொள்கிறது. இருந்தாலும் அதற்கும் ஒரு விலை இருக்கிறது 40 கோடி இதில் அடங்குகிறது. இது இல்லாமல் டிஜிட்டல் ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி உடன் சன் பிக்சர்ஸ் ஓடிடி நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. இதன் தொகை 50 கோடி. ஆடியோ உரிமம் 5 கோடி.

இப்படி இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது.  இந்த வசூல் நிலைமை இது இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்புக்கு உள்ளாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்