fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மிருகத்தன வீர ராகவனாக மிரட்டும் பீஸ்ட் டிரைலர்.. டெரரிஸ்ட்டை ஓடவிடும் தளபதி விஜய்

beast

Videos | வீடியோக்கள்

மிருகத்தன வீர ராகவனாக மிரட்டும் பீஸ்ட் டிரைலர்.. டெரரிஸ்ட்டை ஓடவிடும் தளபதி விஜய்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் விஜய் ஒரு ரா ஏஜென்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் விஜய்யின் பெயர் வீர ராகவன் என சமீபத்திய பேட்டியில் நெல்சன் திலீப்குமார் கூறியிருந்தார். இப்படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்தினை திரையரங்கில் காண விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் காத்திருக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் விஜய்யின் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் பக்காவாக நடித்துள்ளார். தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் கேஜிஎப் படத்தின் டிரைலர் சார் அவர் வெளிவரும்போது யாரும் குறுக்கே வரக்கூடாது என வசனம் வைத்தபடி கூறியிருப்பார். ஆனால் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் என்ன பயமா இருக்கா இனிமேல்தான் பயங்கரமா இருக்கும் என கூறிவருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top