Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-beast

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொம்மையாக நடித்த விஜய்.. பீஸ்ட் பட நடிகர் கிண்டல்!

பொம்மை போல விஜய் என்னை தூக்கி சென்றார் என்று பீஸ்ட் படத்தில் நடித்த நடிகர் ஷைன் டாம் தெரிவித்தது பலருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். தீவிரவாதிகள் மாலினை ஹைஜாக் செய்து துப்பாக்கி முனையில் மிரட்டும் நிலையில், அந்த மாலில் உள்ள பொது மக்களை காப்பாற்றுவதற்காக விஜய் போராடும் பாணியில் பீஸ்ட் படத்தின் கதை அமைந்திருக்கும்.

ஆனால் இத்திரைப்படமும் யோகி பாபு நடித்த கூர்க்கா திரைப்படமும் ஒன்றாக இருப்பதாக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே இத்திரைப்படத்தில் தீவிரவாதி கும்பலில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் நடித்திருப்பார். சூட்கேசை தூக்கி செல்வது போல் ஷைன் டாமை கட்டிப்போட்டு விஜய் தூக்கி செல்வதுபோல் காட்சி அமைந்திருக்கும்.

இந்த காட்சியை குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசிய ஷைன் டாம்,அந்த காட்சியில் விஜயின் முகம் பொம்மை போல் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் நடித்துள்ளதாக கூறிவிட்டு படக்குழுவினர் அப்படி நடிக்க வைத்ததாக மழுப்பினார். இதன் மூலம் விஜய்க்கு நடிப்பு வரவில்லை என்பதை சுற்றிவளைத்து ஷைன் டாம் கூறியுள்ளது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின், கதைக்களம் சரியாக அமையாததால் பலரையும் ஏமாற்றத்தில் உள்ளாக்கியது. 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருந்தும் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் நெட்டிசன்கள் தற்போது வரை கலாய்த்து வருகின்றனர்

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில், ஜெட் விமானத்தில் பறக்கும் விஜய் எதிரே வரும் விமானத்திற்கு சல்யூட் செய்யும் காட்சியை பார்த்து நெட்டிசன்கள் இன்று வரை மீம்ஸ்,கமெண்டுகள் என சமூக வலைத்தளத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர். சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் பீஸ்ட் படத்தை ஒப்பிட்டு இன்னும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top