fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பீஸ்ட் படத்தால் கூர்கா படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. எது எப்படியோ எங்களுக்கு லாபம் தான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தால் கூர்கா படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. எது எப்படியோ எங்களுக்கு லாபம் தான்

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து பல கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் இப்படம் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் வெளிவருவதற்கு முன்பு ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் இது கூர்கா திரைப்படம் போல் இருக்கிறது என்று கலாய்த்து வந்தனர். தற்போது சினிமாவில் பிரபல காமெடி நடிகராக உருவெடுத்திருக்கும் யோகி பாபு இந்த கூர்கா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

சமீபகாலமாக இவர் கதையின் நாயகனாக கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகி பாபு இந்த கூர்க்கா திரைப்படத்தில் ஒரு மாலில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

இதே காட்சிதான் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திலும் இருக்கிறது. இதைத்தான் தற்போது ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி கருத்து வெளியிட்டு வருகின்றனர். மேலும் பீஸ்ட் படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே கூர்க்கா திரைப்படத்தையும் பார்ப்பதற்கு ஆசைபடுகின்றனர்.

அதனால் தற்போது இணையதளத்தில் கூர்கா திரைப்படம் பற்றிய தகவல் தான் அதிக அளவில் தேடப்பட்டு வருகிறது. அதோடு இந்தத் திரைப்படம் குறித்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதனால் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதை பார்த்த கூர்க்கா படத்தின் தயாரிப்பு நிர்வாகம் எது எப்படியோ பீஸ்ட் படத்தால் எங்களுக்கு லாபம் தான் என்று கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top