விஜய் பிராண்ட் யாரால் அழிக்க முடியாது.. சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான்

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியானது. கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என படம் உருவாகும் போதே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த பின் டிரெய்லர் வெளியாகி இன்னும் அந்த எதிர்பார்ப்பை கூட்டியது. படத்தின் வணிகமும் பெரிய அளவில் நடைபெற்றது.

கடந்த 13ஆம் தேதி வெளியான படம் முதல் நாள் அன்றே கலவையான விமர்சனங்களைப் பெற தொடங்கியது. எப்பொழுதும் பெரிய நடிகரின் படம் வெளியாகும் போது கலவையான விமர்சனங்களைப் பெறுவது தற்போது சகஜமாக இருந்தாலும், படம் சில ரசிகர்களையும் கவர தவறியது.

ஆனால் முதல் நாள் படம் 38 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழில் அதுவரை வெளியான படங்களில் அதிக முதல் நாள் வசூல் செய்த படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல் நாள் தவிர்த்து படம் பெரிய வசூல் இல்லை என பரவலாக கூறப்பட்டது. பீஸ்ட் படத்தின் கலெக்ஷன் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது உண்மைதான், இருப்பினும் விஜய் என ஒரு ஸ்டாரை பார்க்க ரசிகர்களும், விஜய் படம் என்றால் ஆக்ஷன், காமெடி, பாடல் என அனைத்து இருக்கும் என்பதால் அவருக்கு குடும்ப ரசிகர்களும் அதிகம். பெரும்பாலும் குழந்தைகளை அவர் கவர்ந்துள்ளதால் விடுமுறை தினங்களில் குடும்பத்தோடு அவருடைய படம் பார்க்க மக்கள் வருவார்கள்.

இவர்கள் யாரும் இந்த விமர்சனங்களை குறித்து பெரிதும் கண்டு கொள்வதில்லை. ஆகையால் படம் வெளியாகி முதல் இரண்டு தினங்களிலேயே 100 கோடி தாண்டியது என்பதை விட தற்போது இரண்டாவது வாரமாகியும் புக்கிங் சிறப்பாக தான் இருந்து வருகிறது. ஒஅதேபோல விஜய் என்பவர் விமர்சனங்களுக்கும், போட்டிகளுக்கும் அப்பாற்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளார்.

அவருடைய படங்களை விமர்சனங்கள் பெரிதும் பாதிக்காது, அது அவருடைய ஒரு அசாத்திய வளர்ச்சி, எங்களை பொருத்த வரையில் படம் நல்ல வசூலை தான் ஈட்டியுள்ளது, திரையிட்ட பெரும்பாலான இடங்களில் லாபத்தை படம் எடுத்து விட்டது என கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். இந்த படமும் தமிழில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் தற்போது இந்த படமும் இணைந்துள்ளது எனவும் கூறினார்.

படத்தின் வசூலிற்கு முழு காரணம் விஜயுடைய மாஸ் இமேஜ் மட்டுமே என கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். கே.ஜி.எஃப் 2 படத்தின் நேர்மறையான விமர்சனங்களால் பீஸ்ட் படத்திற்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது விஜய் என்கிற ஒரு ஸ்டார் இமேஜை வீழ்த்த தமிழகத்தில் இயலாது என்பதே பீஸ்ட் படத்தின் வசூல் கூறுகிறது. தமிழகத்தில் கே.ஜி.எஃப் 2 படமும் கிட்டத்தட்ட 75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்