fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கத்தி, துப்பாக்கி என அனல் பறக்க வெளிவந்த பீஸ்ட் படத்தின் 3ம் பாடல்.. 15 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்ஸ்

beast-vijay

Videos | வீடியோக்கள்

கத்தி, துப்பாக்கி என அனல் பறக்க வெளிவந்த பீஸ்ட் படத்தின் 3ம் பாடல்.. 15 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்ஸ்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் விஜய் ஒரு ரா ஏஜென்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் விஜய்யின் பெயர் வீர ராகவன் என சமீபத்திய பேட்டியில் நெல்சன் திலீப்குமார் கூறியிருந்தார். இப்படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்தினை திரையரங்கில் காண விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் காத்திருக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் விஜய்யின் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் பக்காவாக நடித்துள்ளார். தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் கேஜிஎப் படத்தின் டிரைலர் சார் அவர் வெளிவரும்போது யாரும் குறுக்கே வரக்கூடாது என வசனம் வைத்தபடி கூறியிருப்பார். ஆனால் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் என்ன பயமா இருக்கா இனிமேல்தான் பயங்கரமா இருக்கும் என கூறிவருகின்றனர்.

மேலும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் உலகளவில் சென்றடைந்து பிரபலமடைந்தது. சமீபத்தில் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் நல்ல ஹிட்டடித்தது தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாம் பாடலை வெளியிட்டு உள்ளனர். தற்போது இப்பாடல் ரசிகர்கள் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top