விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். மேலும் இப்படத்தை பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் ரசிகர்களை தாண்டி படத்தினை பல பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆடியோ லான்ச் நடைபெறாது என கூறியுள்ளனர். ஆனால் இது வரைக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை.
வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதால் மற்ற நடிகர்களின் படங்கள் இந்த மாதமே வெளியாவதற்கு திட்டமிட்டுள்ளனர். அந்த அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் சாதனை படைத்தது. தற்போது எல்லாரும் அரபி குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Jolly ah irunga Nanba! 🤩#BeastSecondSingle – #JollyOGymkhana sung by Thalapathy @actorvijay is releasing on March 19th!@Nelsondilpkumar @anirudhofficial @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani #Beast #BeastUpdate pic.twitter.com/1C6JcDTi9Q
— Sun Pictures (@sunpictures) March 16, 2022
தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது பீஸ்ட் படத்தின் 2 பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் விஜய் அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடலின் சிறிய வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.