Tamil Cinema News | சினிமா செய்திகள்
குறிச்சு வச்சுக்கங்க.. மாஸ்டர்ல தளபதி இந்த காட்சில சும்மா தெறிக்க விடுவாரு.. பிரபல நடிகரின் மாஸ் அப்டேட்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி 22 ஆம் தேதி எனவும் பட வெளியீட்டு தேதி ஏப்ரல் 9ம் தேதி எனவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள நாட்டின் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதிகள் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்யுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதாக பல இடங்களில் கூறப்பட்டது. அதேபோல் கேங்க்ஸ்டர் படமாகவும் இருக்கும் என லோகேஷ் கூறியது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுவரை இல்லாத அளவிற்கு வெறித்தனமாகவும் சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் தனது ரசிகர்களின் எதிர் பார்ப்புகள் இரட்டிப்பாகிறது.
அதுமட்டுமில்லாமல் மாணவர்களை பெரிதும் பிளாஷ்பேக் காட்சி ஒன்று இருக்கிறதாம். அதில் புது விதமான கெட்டப்பில் மிரட்டி இருக்கிறாராம் தளபதி விஜய்.
மேலும் நேற்று வெளியான பொளக்கட்டும் பரபர பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. அதனை மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு, அந்தப் பாடலில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படி காட்சிகள் இருப்பதாக MASTER vs BHAVANI என ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

shanthnu-tweet
