விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரின் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது.

vijay

துள்ளாத மனமும் துள்ளும் எழில் இயக்க்கத்தில் உருவான படம் . இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.படம் 1999ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில்மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் வெள்ளிவிழா கொண்டாடியது.

thullatha

விஜய் நடித்த காதல் படங்களில் மாபெரும் ஹிட் படங்களில் ஓன்று துள்ளாத மனமும் துள்ளும் இந்த படத்தில் சிறப்பு அம்சங்கள் விஜய் சிம்ரன் ஜோடி மற்றும் பாடல் கதை என அனைத்தும் பக்காவாக அமைந்தது  இப்படம் குறித்த சில விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் எழில்.

Vadivelu
Vadivelu

அவர் கூறியதாவது இந்த படத்தை முதலில் வடிவேலை நினைத்து தான் கதை எழுதினேன் இந்த கதையை கேட்ட வடிவேல் கதை மிகவும் பிடித்து போக நடிப்பதற்கு ஒப்புகொண்டார் பின்பு தயாரிப்பாளர்களை தேடினோம் ஆனால் யாரும் முன்வரவில்லை.

Murali-

அதனால் பின்பு நடிகர் முரளிக்காக கொஞ்சம் கதையை மாற்றி எழுதினேன்  ஆனால் வடிவேல் போல் நடிகர் முரளிக்கும் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை.

அதனால் பின்பு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடிகர் விஜய் அவர்களிடம் இந்த மொத்த கதையையும் கூறினேன் அதை கேட்டு அடுத்த நாளே எனக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் அது மட்டும் இல்லாமல் சூப்பர் கதை நான் நடிக்கிறேன் என்றார்.

Vijay

தளபதி விஜய் நடிக்கிறார் என்பதால் கொஞ்சம் ஆக்ஷன் காட்ச்சிகள் காதல் பாடல்கள் என கதையில் மாற்றம் செய்தேன் அதாவது கமர்ஷியலாக சில மாற்றங்கள் செய்தேன் என கூறினார்.