Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடிவேலுக்கு எழுதிய கதையில் விஜய் நடித்த படம் எது தெரியுமா? அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தளபதி விஜய். விதையாக விழுந்தவர் தற்போது ஆலமரமாக உயர்ந்துள்ளார். அதைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகளாக அவரது ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றனர்.
துள்ளாத மனமும் துள்ளும் எழில் இயக்கத்தில் உருவான படம் . இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் 1999ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் நடித்த காதல் படங்களில் மாபெரும் ஹிட் படங்களில் ஓன்று துள்ளாத மனமும் துள்ளும்.
துள்ளாத மனமும் துள்ளும் பட கதை முதலில் வடிவேலுவை மனதில் வைத்துதான் எழுதப்பட்டதாகவும், பிறகு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் அந்தக்கதை நடிகர் முரளியிடம் சென்றதாகவும் எழில் கூறியுள்ளார். முரளிக்கும் தயாரிப்பாளர் கிடைக்காத சோகம்.
பிறகு கடைசியாக தளபதி விஜய் இடம் இந்த கதையை கூறுவதற்கான வாய்ப்பு கிடைத்ததாம். கதையைக் கேட்ட உடனே சம்மதம் தெரிவித்து தயாரிப்பாளரையும் ரெடி பண்ணி விட்டாராம் விஜய். முதலில் வெறும் காமெடியை மட்டுமே கொண்ட இந்த கதையை தளபதி விஜய்யின் வருகைக்கு பிறகு கொஞ்சம் கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்க வேண்டி இருந்ததாம்.
அதற்கு கிடைத்த வெற்றிதான் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெள்ளி விழா கொண்டாடியது. வடிவேலு மற்றும் விஜய் இணைந்து நடித்த படங்களில் எல்லாம் காமெடி காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
