இன்று(23-Apr-2017), அஜித்தும் விஜயும் ஒரே கேரியரில் வந்த உணவை சாப்பிட்ட சுவராஸ்யமான தகவலை பார்க்கலாம்..!

அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார். அது பற்றிய ஒரு ரீவைண்டு நினைவு தான் இது..

அஜித் – விஜய் இணைந்து நடித்த முதல் படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும்போது, மதியம் ஆனதும் கச்சிதமாக சாப்பாடு கொண்டுவருவார் விஜய்-ன் அம்மா ஷோபா சந்திரசேகர்.

அப்போது மகன் விஜய்க்கு மட்டும் மதிய உணவு எடுத்து வரமாட்டார், அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார். ஒரே கேரியர் சாப்பாடு சாப்பிட்ட இருவரும்,  இன்று சினிமா கரியரிலும் உச்சத்தில் இருக்கிறார்கள்!

மேலும், படத்தின் இயக்குனர் ஜானகி சௌந்தர் அவர்கள் அஜித் குறித்து கூறும் பொழுது, ஒரு காட்சியில் நடிகர் அஜித் ஒருவரிடம் அடி வாங்குவார்.பிறகு, விஜய் அஜித்தை அடித்தவரை பழி வாங்குவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சி மிக தத்ரூபமாக வந்திருக்கும். அதற்க்கு காரணம் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு தான் என்று சொல்வேன். அஜித்-திற்கு சினிமா என்பது ஒரு உணர்வு, சிறிய கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here