Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த ங்கொக்கா மக்கா அப்டேட்.. தளபதி 65 படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் மன்னனாக திகழ்ந்தவர் தளபதி விஜய். இவரின் கடைசி மூன்று திரைப்படங்களும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக விஜய், விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் கர்நாடகா செல்ல உள்ளனர்.
இதற்கிடையில் தளபதி 65 படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. முன்னணி இயக்குனர்களான ஜெயம் ராஜா, மகிழ் திருமேனி, அட்லி, லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்ற நிலையில் தற்போது வெற்றிமாறனும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் விஜய் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அதற்கு விஜய் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன ஆகும் என இப்பவே அவரது ரசிகர்கள் மனக்கோட்டை கட்டி விட்டனர்.
உண்மையாகவே இருவரும் இணைந்தால் பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
