fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அவங்க தான் வேணும்.. விஜய் போட்ட கண்டிசன்? தளபதி 65 குறித்து மாஸ் தகவல்

vijay-65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவங்க தான் வேணும்.. விஜய் போட்ட கண்டிசன்? தளபதி 65 குறித்து மாஸ் தகவல்

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தில் வாத்தியார் வேடத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அடுத்தாக சுதா கொங்காரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

தற்போது விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார், வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய், சுதா கொங்காரா உடன் படம் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

கடந்த வாரம் நடிகர் விஜய் சுதா கொங்காராவிடம் கதை கேட்டுள்ளார். சுதா கொங்காரா சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துபோனதாம். விஜயின் சினிமா கிராபில் முதல் பெண் இயக்குனராக சுதா கொங்காரா இடம் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க விஜய் முக்கிய கண்டிஷன் போட்டுள்ளாராம். அதன்படி பிரபல கோலிவுட் ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில், தற்போது வவிஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறர்.

அதேபோல் பெரிய ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று விஜய் கேட்டுள்ளாராம். அதேபோல் வேறு முக்கியமான பாலிவுட் ஹீரோயின் ஒருவரை தமிழில் அறிமுகம் செய்ய வைக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.

இந்த கண்டிசன்களுக்கு சுதா கொங்கரா இதற்கு ஒப்புக்கொண்டாராம். இதனால்தான் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது . விஜய் கேட்ட அந்த கோலிவுட் ஹீரோ யார் என்று விவரம் தெரியவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top