விஜய் மெர்சல் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்து வருகிறார் மேலும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

vijay63
vijay63

படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர் நிறுவனம் இந்த வருட தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளார்கள் படக்குழு, ஆனால் ஸ்ட்ரைக் நடப்பதால் அது சாத்தியமா என தெரியவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் இந்த படத்தை முடித்த பிறகு விஜய் யாருடன் கூட்டணி வைக்கபோகிறார், இயக்குனர் யார், என்பது பல கோடி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது, கொஞ்ச நாட்களுக்கு முன்பு விஜய் 63 படத்தை தீரன் படத்தை இயக்கிய வினோத், மோகன் ராஜா, அல்லது அட்லி இவர்களில் ஒருவர் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போகிறார்கள் என தகவல் வெளிவந்தது.

ஆனால் தபோழுது வந்த தகவலின் படி விஜய் 63 படத்தை தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் தான் இயக்க போகிறார் எனவும் அதற்க்கான பேச்சுவார்த்தை தற்பொழுது நடந்து வருவதாகவும் கூறபடுகிறது.

சமீபத்தில் விஜய் 63 படத்தை Super Good Films நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது என அறிவித்தார்கள்.மேலும் இயக்குனர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறபடுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.