விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் 63வது படத்தின் இயக்குனராக மோகன் ராஜா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

mohan raja
mohan raja

பெரும்பாலும், தளபதிக்கு ஒரு வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்பதே டார்கெட். அதனால், ஒரு படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டு இருக்கும் போதே அடுத்த படத்தின் இயக்குனரை பிக்ஸ் செய்து விடுவார். இது, விஜயின் பல கால பழக்கமாகவே இருக்கிறது. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெகுகாலம் கழித்து தயாரித்து வருகிறது. படப்பிடிப்பும் 50 சதவீதத்தை தாண்டி விட்டதால், அடுத்த இயக்குனர் யார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியிலும், கோலிவுட் வட்டாரத்திலும் பரவலாகவே காணப்படுகிறது.

விஜயின் தெறி, மெர்சல் படங்களை தந்த இயக்குனர் அட்லீக்கு தான் இந்த முறையும் விஜய் ஓகே சொல்வார் என பலரும் நினைத்து கொண்டு இருக்க இங்கே தான் வைக்கப்பட்டது ஒரு டுவிஸ்ட். விஜயை அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்நிறுவனத்தில் முதலில் கதை சொல்லியவர் அட்லீ தான். கதையை கேட்ட குழு, விஜயுடன் பேசிவிட்டு சொல்கிறோம். அவர் தான் முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு நீங்கள் என்றாலும் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறி இருக்கின்றனர். அவரை தொடர்ந்து, பிரபல இயக்குனர்களும் கதை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு யாருக்குமில்லாமல் விஜய், மோகன் ராஜாவிற்கு க்ரீன் சிக்னல் அடித்திருப்பதாக கூறப்படுகிறது.

mohan raja

தமிழ் சினிமாவில் ரீமேக் கதைகளை மட்டுமே எடுத்து வந்தவர் மோகன் ராஜா. தன் கதையில் எடுக்கப்பட்ட முதல் படமான தனி ஒருவன் மாஸ் ஹிட் அடித்தது. இப்படத்தை தயாரித்தது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான். இங்கு தான் விஜயிற்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, மெர்சல் படம் மெகா ஹிட் அடித்திருக்கிறது. தற்போது தயாராகி வரும் விஜய்62 படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என தளபதி யுகித்து இருக்கிறாராம். அதனால், கண்டிப்பாக அடுத்த தனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் படத்தை இயக்க மோகன் ராஜாவல் முடியும் என எண்ணுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக, வேலாயுதம் படத்தில் விஜயும், மோகன் ராஜாவும் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.