Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகுது தளபதி 62 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ. கருப்பையா, யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளார். படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
சென்னையில் விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றது பட ஷூட்டிங். மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது இப்படம். விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என அனைவரும் ஆர்வமாக ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜய் – கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகியுள்ளது. பாடல் ஷூட்டிங்கா, ரொமான்டிக் காட்சியா என்ற தகவல்கள் இல்லை.

Vijay 62
சினிமாபேட்டை கிசு கிசு
ஏற்கனவே தெறி , மெர்சல் படங்களில் சமந்தா – விஜயின் ரோமன்ஸ் அனைவராலும் லைக் செய்யப்பட்ட நிலையில், முருகதாஸும் அதே பார்முலாவை பின் பற்றுகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது.
