Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடையை மீறி தளபதி-62 பட ஷூட்டிங்.! “இருக்கு ஆனா இல்லை” என படக்குழுவை மரணமாய் கலாய்த்த காமெடி நடிகர்
Published on
விஜய் தற்பொழுது முருகதாஸ் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார், முருகதாஸ் விஜய்யுடன் இணைந்து இரண்டு மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படபிடிப்புகள் மிக பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது, இப்படி இருக்க சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளது புது படத்தை ரிலீஸ் செய்வதில்லை, அதேபோல் போஸ்ட் புரடக்ஷன் கிடையாது படபிடிப்புக்கும் யாரும் செல்ல கூடாது.
ஆனால் தளபதி 62 படக்குழு மட்டும் சிறப்பு அனுமதி கேட்டு படபிடிப்பை நடத்தி வருகிறார்கள் அதனால் இப்படி ஸ்ட்ரைக் சொல்லியும் படபிடிப்பு நடத்துவதால் காமெடி நடிகர் கருணாகரன் ‘ஸ்ட்ரைக் இருக்கு ஆனா, இல்லை’ என்று கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார்.
