தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியான படம் மெர்சல். பாக்ஸ் ஆபிஸ் பட்டய கிளப்பி வரும் இப்படம் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Vijay
Vijay

இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி மெர்சல் திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதன் படி மெர்சல் திரைப்படம் உலக அளவில் ரூ.252.5 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ.122 கோடி வசூல் செய்துள்ளது.

vijay

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 19ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vijay

அதோடு மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற வெற்றி பாடலை கொடுத்த ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய்-ARR கூட்டணியை விஜய் ரசிகர்கள் சமூகவளைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.