Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்62 படத்தை இவர் மிஸ் செய்ததால் தான் விஜயிடம் சென்றது தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்62 படத்தின் கதை தளபதிக்காக முதலில் தயாரிக்கப்பட்டது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

thalapathy 62
கோலிவுட்டில் சூப்பர்ஸ்டார் மற்றும் உலகநாயகனுக்கு பின்னர் அதிக ரசிகர்களை வைத்திருப்பது தல, தளபதி தான். இணையத்தில் இரு தரப்பு தங்கள் மனம் கவர்ந்த நாயகனுக்காக போட்டா போட்டி போட்டு கொள்வார்கள். சத்தமே இல்லாமல் இருப்பவர் அஜித். அவர் எங்கு இருப்பார் என்பது யாருக்குமே தெரியாது. தலக்கு நேர் மாறாக இருப்பவர் தளபதி. சமூகத்தின் சில பிரச்சனைகளுக்கு தானாகவே முன் வந்து கருத்து சொல்பவர். அதை போல, தெறி, பைரவா, மெர்சல் உள்ளிட்ட படங்களும் அதிக சமூக பிரச்சனையையே பேசியது. தற்போது, தனது ஆஸ்தான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படத்தின் பெயர் துப்பாக்கி. ராணுவ அதிகாரியாக விஜய் நடத்த அந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இதையடுத்து, இந்த ஜோடி இணைந்த படத்துக்கு கத்தி என தலைப்பு வைத்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சமந்தா நடித்திருந்த அந்த படமும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க, இந்த காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். வரலட்சுமி, ராதா ரவி, லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா பறந்து இருக்கிறது. இந்த வருடம் தளபதி பொங்கலாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

rajinikanth
இந்நிலையில், விஜய் 62 படத்தின் கதையின் நாயகன் முதலில் விஜய் இல்லையாம். இது சூப்பர்ஸ்டாருக்காக எழுதப்பட்ட கதை தான். காலா பட சமயத்தில் ரஜினிகாந்திடம், முருகதாஸ் இந்த கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி இருக்கிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்ற புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம், விஜய்62 படம் கண்டிப்பாக மாஸாக இருக்கும் என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர்.
