fbpx
Connect with us

தளபதி 62 ஹீரோயின் மற்றும் கேமராமேன் இவங்க தான்..! புது அப்டேட்.!

News / செய்திகள்

தளபதி 62 ஹீரோயின் மற்றும் கேமராமேன் இவங்க தான்..! புது அப்டேட்.!

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லி இயக்கிய இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன.

mersal vijay

mersal vijay

இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

mersal

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று நன்றியை தெரிவித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

mersal

தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை ராகுல் பரீத் சிங் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாகவுள்ளார் என கூறுகிறார்கள்.

ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top