விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

vijay_cinemapettai
vijay

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்து.

விஜய்யின் மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏன் என்றால் பல சிக்கள்களை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறது மெர்சல்.

மெர்சல் ரிலீஸ் ஆகவே இல்லை அதற்குள் தளபதி 62 படத்திற்கான நடிகையை தேட ஆரம்பித்துவிட்டார் இயக்குனர்.

rakul-preethi

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராகுல் பிரீத் சிங்.

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத் சிங். தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போனார்.

அங்கு முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.தற்போது ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

rakulpreet

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால், ஸ்பைடர் தோல்வி காரணமாக ராகுல்பரீத் சிங் தளபதி62 வாய்ப்பை இழக்கலாம் என்றும், ஒரு வேளை ராகுல் பரீத் சிங் நிக்கப்பட்டால் வனமகன் சாயிஷா சைகல் அந்த வாய்ப்பை பெறும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.