fbpx
Connect with us

எதிர்பார்ப்பை எகிறவைத்த விஜய் 62-ல் 8 தேசிய விருதுகளை வாங்கிய பிரபலம் இணைகிறார்.!

mersal magic

News | செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைத்த விஜய் 62-ல் 8 தேசிய விருதுகளை வாங்கிய பிரபலம் இணைகிறார்.!

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியான படம் மெர்சல். பாக்ஸ் ஆபிஸ் பட்டய கிளப்பி வரும் இப்படம் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

mersal

இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி மெர்சல் திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதன் படி மெர்சல் திரைப்படம் உலக அளவில் ரூ.252.5 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ.122 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் ரூ.12.85 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.24 கோடியும், கோவையில் ரூ.20.5 கோடியும், மதுரையில் ரூ.22 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.8 கோடியும் மெர்சல் படம் வசூல் செய்துள்ளது.

mersal

அதேபோல் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிருந்தி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு மெர்சல் வௌியிடப்பட்ட நிலையில் , அங்கு சுமார் ரூ. 9 கோடி வரை மெர்சல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

mersal

ஏனெனில் ஏற்கனவே இந்த கூட்டணி துப்பாக்கி, கத்தி என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது. இந்நிலையில் அடுத்து மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தில் ஏற்கனவே மலையாள ஒளிப்பதிவாளர் ஒருவரை கமிட் செய்ய, தற்போது 8 தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத்தை தளபதி-62வில் எடிட்டராக கமிட் செய்துள்ளனர்.

mersal magic

mersal magic

எட்டு விருதுகளை வாங்கிய ஒரு ஒளிப்பதிவாளர் தளபதி 62 படத்தில் இணைந்திருப்பது விஜய் ரசிகர்களிடையே மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களின் மத்தியில் தளபதி62 படத்தின் மீது பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top