Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தில் லீக்கான விஜய்62 படத்தின் மாஸ் காட்சி, அதிர்ச்சியில் படக்குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் முக்கிய காட்சி சமூக வலைத்தளத்தில் லீக்காகி இருப்பது படக்குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தனது ஆஸ்தான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இதற்கு முன்னரே, இருவரும் கத்தி மற்றும் துப்பாக்கி என இரு மெகா ஹிட் படத்தை கொடுத்ததால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் செம குஷியாகினர். அதிலும், படத்தை பெரிய ப்ரேக்கிற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தின் மாஸான ட்யூன்கள் காதில் கேட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த செய்திகள் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாகவே அமைந்தது.
இதை தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்புகள் முதலில் சென்னையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் கொல்கத்தாவில் நடைபெற்றது. அந்நேரத்தில், டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஏற்பட்ட வாய்க்கா தகராறில் தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தை அறிவித்தது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில், தளபதி படத்திற்கு மட்டும் சில நாட்கள் கிரேஸ் பிரீயட் கொடுக்கப்பட்டது. அதுவே, சக நடிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், சமீபத்தில் இப்போராட்டம் கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து, கோலிவுட்டே கலை கட்ட தொடங்கி இருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத விஜய் படத்தின் படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய பைக் ரேஸ் காட்சி நேற்று இரவு படமாக்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக இன்று காலை முதல் அதன் புகைப்படம் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. இருந்தும், புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டு இருப்பதால் விஜய்62 படக்குழு சற்று பெருமூச்சு விட்டு, பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளனர்.
#Vijay62 #shootingspot #MassScene #armurugadas pic.twitter.com/Ek7lufT9Nn
— Cinemapettai (@cinemapettai) April 28, 2018
